திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அரக்கோணம் சாலையில் முரளி என்பவருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உள்ள சமையல் அறையில் வழக்கம்போல் சமையல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு சமையல் அறையில் இருப்பதை கண்டதும் ஊழியர்கள் கூச்சலிட்டு ஓட்டம் பிடித்தனர். இவர்களை கண்ட வாடிக்கையாளர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பு அருகில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.
இதையும் படிங்க:வீடியோ: சிவகங்கையில் அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி