திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் சுற்றுவட்டார இடங்களில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையரை காவல் துறை கைது செய்தது. வெங்கல் காவல்துறை, பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பேருந்தில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் காவல் துறையினரைக் கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் அவரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பல இடங்களில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையர் தான் தற்போது சிக்கியுள்ளார் என்று தெரியவந்தது.
மேலும், இவர் சென்னை கிண்டியைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்பதும், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 61 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மது போதையில் அப்பாவி இளைஞனை தாக்கி நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பல் கைது!