ETV Bharat / state

மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன்; திருத்தணியில் நடந்தது என்ன? - திருத்தணி நகராட்சி

திருத்தணியில் மனைவி மீது சந்தேகப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன்
author img

By

Published : Jul 2, 2023, 5:59 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் தெரு, இரட்டைக்கிணறு அருகே வசிப்பவர், விநாயகம். இவரது மனைவி கிரிஜா. இருவரும் 14 வருடமாகப் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மகன் ஒருவன் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, விநாயகம் மற்றும் கிரிஜா தம்பதியினர் தங்களது சொந்த ஊரான திருத்தணிக்கு வந்துள்ளனர். ஊருக்கு வந்த நாளில் இருந்தே இருவருக்கும் தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. மேலும், மனைவி கிரிஜா மீது கணவன் விநாயகம் தொடர்ந்து சந்தேகம் அடைந்து, ஆபாசமான வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் விநாயகத்தின் செயல்பாடுகள் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 01) அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிரிஜாவை, அவரது கணவன் விநாயகம் வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதில் தூங்கிக் கொண்டிருந்த கிரிஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: மது பாட்டிலுக்காக கொலை: 2 திருநங்கை உட்பட மூவர் கைது - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!

இதனை அடுத்து அருகில் உள்ள குடும்பத்தார் மற்றும் விநாயகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில் நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, திருத்தணி போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரிஜாவின் உடலைத் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த விநாயகத்தை போலீசார் கைது செய்து, விநாயகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தனது மனைவி தன்னை விட்டுச்சென்று விடுவாரோ, உறவினர்கள் அவருக்கு வேறு திருமணம் செய்துவைத்து விடுவார்களோ, என்ற சந்தேகத்தில் அவரை கொலை செய்தேன் என்று விநாயகம் தெரிவித்துள்ளதாக, போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

மேலும், சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் தான் விநாயகம் தொடர்ந்து கிரிஜாவிடம் சண்டை இடுவார் என்று விநாயகத்தின் குடும்பத்தார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் திருத்தணி நகராட்சியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய தடை... இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.