சென்னை: வியாபாரம் செய்து வருபவர் சத்திய மூர்த்தி. இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அறிமுகமாகி தனக்கு தொழில் ரீதியாக உதவி செய்து என்னை முன்னேற்றிவிட வேண்டும் என சத்திய மூர்த்தியிடம் உதவி கேட்டு வந்துள்ளார்.
கடனைத் திருப்பி கேட்டதால் தகராறு : இதனையடுத்து, ஜோதிக்கு கடந்த சில ஆண்டுகளாக சிறுக சிறுக ரூ.2.5 கோடி மதிப்புள்ள மளிகை பொருள்களைக் கொடுத்து உதவி செய்துள்ளார் சத்திய மூர்த்தி.
கொடுத்த பொருள்களுக்கு சில மாதங்களாக சத்தியமூர்த்தி, ஜோதியிடம் பணம் கேட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபம் அடைந்த ஜோதி, இரண்டு தினங்களுக்கு முன் சத்தியமூர்த்தி கடைக்குள் தனது நண்பர்களுடன் புகுந்து அங்கு இருந்த பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தேடி வரும் காவல்துறை : அந்தப் பெண் ஊழியர்களிடம் ” உங்கள் முதலாளி என்னிடம் பணம் கேட்பது சரியில்லை. மீண்டும் பணம் கேட்டால் அவனை கொலை செய்துவிடுவேன்..” என்று கூறி மிரட்டியதுடன் அங்கு பணியில் இருந்த பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இந்தச் சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல்துறையினர் ஜோதியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் அமைச்சர்களுடன் ஆலோசனை