திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கும் எல்&டி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு கோடி மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர்
இதனை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார். கரோனா தீவிர சிகிச்சை மையம் வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இதன்மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.