சென்னையின் முக்கிய நீர்ஆதாரங்களில் ஒன்றாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரியில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரை சேமித்து வைத்து செம்பரபாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு பகிர்ந்து அளிக்கப்படுவது வழக்கம். சுமார் 35அடி உயரம் கொண்ட இந்த ஏரியில், 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது வடகிழக்கு பருவமழை, ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நிலையில் ஏரி இல்லை. இந்த நிலைக்கு ஏரி வருவதற்கு முக்கிய காரணம் தூர்வாரதது ஆகும். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, ஏரியை முறையாக தூர்வாரி சுத்தம் செய்தால் மட்டுமே வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.