ETV Bharat / state

18 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளி அஸ்ஸாமில் கைது! - Tiruvallur DSP

திருவள்ளூர்: 18 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளியை திருவள்ளூர் காவல் துறையினர், அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்று கைதுசெய்து, திருத்தணி சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையினரின் இந்தச் செயலை பொதுமக்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

போலீஸ்
போலீஸ்
author img

By

Published : Dec 9, 2020, 11:38 AM IST

தமிழ்நாடு காவல் துறைக்குப் பெருமைசேர்த்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறை, 18 ஆண்டுகளாக கொலை வழக்கில் தேடப்பட்டுவந்தவரை கைதுசெய்துள்ளனர்.

1996ஆம் ஆண்டு இரவு சென்னை விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பயணி ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் முன்னாள் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைவீரர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அத்துல் சந்திரதாஸ் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பயணியை சுட்டுக்கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தால் 2002ஆம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

திருவள்ளூர்
18 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளி: அஸ்ஸாமில் கைதுசெய்த காவல் துறை
இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சந்திரதாஸை கைதுசெய்ய காவல் துறை இயக்குநர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் தலைமறைவாக இருந்த சிஆர்பிஎஃப் வீரர் அத்துல் சந்திரதாஸை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.
தேடுதலைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி தலைமையில் உதவி ஆய்வாளர் சிவா, சிறப்பு உதவி ஆய்வாளர் சாரதி, நாகேந்திரன் ஆகியோரைக் கொண்ட தனிப்படைக் குழு, மாவட்ட சைபர் கிரைம் காவல் துறை உதவியுடன் குற்றவாளி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி தலைமையிலான தனிப்படையினர் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்று கொலை குற்றவாளியை சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி பேட்டி
மேலும் கைதுசெய்யப்பட்டது குறித்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி கூறுகையில், காவல் துறை இயக்குநர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின்படி பல்வேறு இன்னல்களுக்கு இடையே 18 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த குற்றவாளியைக் கைதுசெய்ததாகவும், அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அது உடனடியாகத் தீர்க்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு கொண்டுவரப்பட்ட கொலை குற்றவாளி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.