ETV Bharat / state

குடும்பத் தகராறில் விஷம் குடித்தத் தம்பதியர்- இளம்பெண் உயிரிழப்பு! - தனியார் மருத்துவமனை

திருவள்ளூர்: குன்றத்தூர் அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி ஆகிய இருவரும் விஷம் குடித்தனர். இதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

the-couple-drank-the-poison-to-compete-the-tragedy-of-the-death-of-a-teenager

author img

By

Published : Jan 22, 2021, 9:33 AM IST

திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த மணி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி தாஸ். இவருக்கு துர்கா(22), என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றும் (ஜன.22) கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பூபதி தாஸ், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

இதைக்கண்ட அவரது மனைவி துர்கா, அந்த விஷப் பாட்டிலை வாங்கி, அவர் முதலில் குடித்துள்ளார். இதையடுத்து பூபதி தாசும், அந்த விஷத்தை வாங்கி குடித்து விட்டு இருவரும் வாந்தி எடுத்தபடி, மயங்கினர்.

இதையடுத்து இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூபதிதாஸின் பெற்றோர், இருவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் துர்கா இறந்துவிட்டதாகவும், பூபதி தாஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா கடத்தல், இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.