திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில்.
கடந்த 19ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெரும் இந்த விழாவில் பெருமாள் தினந்தோறும் சிம்மவாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, அன்னவாகனம், குதிரைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிப்பார்.
முக்கிய விழாவான கரிகிருஷ்ணப் பெருமாளும், அகத்தீஸ்வரனும் சந்திக்கும் நிகழ்வு பரத்தாவஜ முனிவர் ஆசிரமம் முன்பாக இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பித்தனர்.