திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளிய முத்துமாரியம்மன் அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. அதன்பின் தொடர் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆலய கட்டிடம் அமைப்பதற்காக இன்று பூமிபூஜை நடைபெற்றது. இந்து அறநிலைத்துறை பொன்னேரி வட்ட ஆய்வாளர் மணி, உதவி பொறியாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. ஆலய நிர்வாகி வேலாயுதம் பூஜைப் பணிகளை செய்து துவக்கி வைத்தார்.
கிராம நிர்வாகிகள் மாசிலாமணி, பட்டாபிராமன், கோவிந்தராஜ், கன்னியப்பன் மற்றும் பாஜக ஒன்றிய தலைவர் டி.எம்.அன்பு, ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி பாண்டியன், பாஜக குமார், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கோகுலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி கலைக்கூட உரிமையாளர் எம்ஜிஆர் சுப்பையா மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை!