திருவள்ளூர்: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பால்வளத் துறை அமைச்சர் சாமு. நாசர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆவினில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் வந்திருக்கிறது. அவர் மீதான விசாரணை நடைபெற்றுவருகிறது. சட்டப்பூர்வமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மழை பேரிடர் காலங்களில் அதிகளவில் பால் விற்பனை தடைபடாமல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆவினில் 41 லட்சம் லிட்டர் பாலில், மழை பேரிடர் காலங்களில் தடையின்றி 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியைப் பிரித்து, திருவள்ளூர் மத்திய கூட்டுறவு வங்கியாகச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்