திருவள்ளூர்: கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே குடிசை வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் கார்த்திக் (28). இவருக்கு அமுதா என்ற மனைவியும் சரவணன்,குமரன்,சரண்யா,சத்யா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவரது வீட்டைச் சுற்றி வசித்து வரும் சிலர் இவரை அந்த இடத்தை விட்டு காலி செய்ய வற்புறுத்தி அடிக்கடி அவர் மீது தாக்குதல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி
இது குறித்து கடந்த மாதம் கார்த்திக் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் சிலர் அவரது வீட்டைச் சுற்றி பள்ளம் எடுத்துள்ளனர்.
இதனால் அவர் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இன்று காலை கார்த்திக் தனது மனைவி பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் கவல்துறையினரின் முன்னிலையில் பிளேடால் தனது கையை அறுத்து கொண்டார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 137 பேர் உயிரிழப்பு