திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 432 மாணவ, மாணவிகள் 12 மையங்களில் தேர்வு எழுதினர். இந்த தேர்வு எழுதுவதற்காக திருவள்ளூரில் ஶ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் ரவீந்திர பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொரட்டூர் என்.கே.எஸ்.விவேகானந்தா வித்யாஸரம் பள்ளி, அம்பத்தூர் ஜி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கவரப்பேட்டை பெருவாயில் டி.ஜெ.எஸ்.பொறியியல் கல்லூரி.
மேலும் ஆவடி ஜெயகோபால் கரோடியா விவேகானந்த வித்யாலயா, புழல் ஜெயின் வித்யாஷரம், திருவேற்காடு ஆர்.எம்.கே.சீனியர் செகண்டரி பள்ளி, திருவெற்றியூர் ஸ்ரீராம் விவேகானந்தா வித்யாலயா கொரட்டூர் பக்தவச்சலம் வித்யாசரம் ஆகிய 12 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 927 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு மையத்திற்குள் செல்லும் மாணவர்கள் முழு கை சட்டை அணியாமலும் கிளவுஸ், தண்ணீர் பாட்டில் ஆதார் அட்டை, தேர்வு நுழைவுச்சீட்டு மட்டும் கொண்டு வருபவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாணவிகளும் கம்மல் துப்பட்டா அணியக்கூடாது என்றும் தலை முடியை விரித்து விட்ட நிலையில் செல்ல வேண்டுமென்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு மாறாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு சீர் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். உடனடி மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பள்ளி முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதன்பேரில் இன்று (செப் 12) தேர்வு எழுதினர்.