திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் 9ஆவது தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்விக்குழுமங்களின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஒருபகுதியாக மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில் சிறப்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சீனிவாசன் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களை வெகுவாக பாராட்டினார். இதையடுத்து மாணவர்களுக்கும் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞானி சீனிவாசன், "இன்றைய காலகட்டத்தில் பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் அரிதாக உள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான சிறுதொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதனை மாணவர்கள் நன்கு திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தையும் தொழிற்சாலைகளையும் மட்டுமே நம்பிடாமல் சுயதொழில் செய்து நீங்களும் பயனடைந்து பத்துபேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்!