திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி மற்றும் விழுக்காட்டை இன்று(ஜூன் 20) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், 'திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய ஐந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் மொத்தமுள்ள 371 பள்ளிகளை உள்ளடக்கிய 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 178 மாணவர்களும் 22 ஆயிரத்து 230 மாணவிகளும் என ஆக மொத்தம் 42 ஆயிரத்து 408 மாணவ, மாணவிகளில் தேர்வு எழுதினர். இதில், 39 ஆயிரத்து 695 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐந்து கல்வி மாவட்டங்களில் மொத்தம் 634 பள்ளிகளை உள்ளடக்கிய 176 தேர்வு மையங்களில் 24ஆயிரத்து 84 மாணவர்களும், 23ஆயிரத்து 518 பெண்களும் என 47 ஆயிரத்து 202 பேர் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 996 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களைத் தடுக்க தனித்தனியே பள்ளிகளுக்கு கடிதம் எழுதி இருப்பதாக' தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி!