ETV Bharat / state

திருவள்ளூரில் யோகாசனத்தில் உலக சாதனைப் படைத்த மாணவன் - நிரலம்ப பூர்ண சக்கராசனம்

ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்ராசனம் செய்து தனியார் பள்ளி மாணவன், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

உலக சாதனை
உலக சாதனை
author img

By

Published : Jun 29, 2021, 7:33 AM IST

திருவள்ளூர்: கும்மிடிபூண்டியைச் சேர்ந்தவர் ரங்கபாஷ்யம். பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் யுவன் (10). தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் மாணவன் யுவன் இணையதளம் மூலம் நடைபெற்ற யோகாசனப்போட்டியில் கலந்து கொண்டு, ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்ராசனம் செய்தார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்

ஏற்கெனவே மாணவி ஒருவர் ஒரு நிமிடத்தில் 21 முறை செய்த சாதனையே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது மாணவன் யுவன் அதனை முறியடித்து, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் காரணமாக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆவ்சம் உலக சாதனை புத்தகங்களில் மாணவன் இடம் பிடித்துள்ளார்.

யோகாசனத்தில் மாணவன் உலக சாதனை படைத்த காட்சி

இதனைத் தொடர்ந்து மாணவரை கௌரவிக்கும் வகையில் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எம்.பில் படிப்பு நிறுத்தம் - கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.