திருவள்ளூர் மாவட்ட அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியானது கும்மிடிப்பூண்டி அருகே மகேந்திரா சிட்டியில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற சுமார் 150 மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் 14, 17, 19 என வயது வாரியாக மூன்று பிரிவுகளில் இருபால் மாணவர்களுக்கு இடையே ஆறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை டிஎஸ்பி பிரியா சக்தி தொடங்கி வைக்க, ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார்.
இந்த போட்டியில் 19 வயது பிரிவில் பொன்னேரி அரசு பள்ளி மாணவி நர்மதா, ஆண்கள் பிரிவில் சென்னை சேது பாஸ்கரா, தனியார் பள்ளி மாணவன் ஸ்டீவிலி சாண்ட்ராவும், 17 வயது பெண்கள் பிரிவில் பாலவாக்கம் அரசு பள்ளி மாணவி அர்ச்சனா, ஆண்கள் பிரிவில் அம்பத்தூர் எஸ் ஆர் எம் பள்ளி மாணவன் திருமுத்தழகன் மற்றும் 14 வயது பெண்கள் பிரிவில் பாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவரஞ்சனி, ஆண்கள் பிரிவில் பாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் திலிப்குமார் ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
உயர்தர சைக்கிள், ஹெல்மெட் என மிரட்டல் காட்டிய தனியார் பள்ளி மாணவர்களிடையே அரசின் விலையில்லா மிதிவண்டியில் வீரியத்தைக் காட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போக்குவரத்தை சீர் செய்த வீலிங் சாகச இளஞ்சிறார்