ETV Bharat / state

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: திருவள்ளூரில் திமுகவினர் கருத்துக் கேட்புக் கூட்டம் - Stalin's voice towards the dawn election campaign in Tiruvallur

திருவள்ளூர்: குன்றத்தூர் பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பரப்புரையில் அமைப்புசாரா தொழிலாளர்களுடன் திமுகவினர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினர்.

dmk
dmk
author img

By

Published : Dec 3, 2020, 8:12 AM IST

திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரை பயணம் மாநிலம் முழுவதும் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள்பட்ட குன்றத்தூர் பகுதியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்களுடன் கலந்துரையாடி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து குன்றத்தூரில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சேக்கிழார் மணிமண்டபத்தை ஆய்வுசெய்தனர். மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு அப்பகுதியில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தனர்.

அப்போது, அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது பழைய உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க முடியாமலும், மாநில அரசிடமிருந்து எந்தப் பலனும் பெற முடியாமல் இருப்பதாக அமைப்புசாரா தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதற்கு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவையனைத்தும் தீர்த்துவைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.