திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான 68 வயதான கி.வேணு அண்மையில் அறுவை சிகிச்சை முடித்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள பன்பாக்கம் கிராமத்தில் வசித்துவரும் கி.வேணுவின் வீட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கி.வேணுவிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் விவரம் குறித்த அவரது குடும்பத்தினரிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உடல்நலம் முன்னேறும்வரை வீட்டில் ஓய்வெடுக்குமாறும் ஸ்டாலின் வேணுவிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ் மொழியில் படித்தவர்களை புறக்கணிப்பதா? ஸ்டாலின் கண்டனம்