திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், பதினோறாம் வகுப்பு மாணவன், யோகாவில் இரு உலக சாதனைகளைப் படைத்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ரஞ்சன் - ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் ஆர். திவ்வியேஷ்(16). அப்பகுதியில் உள்ள மஹாராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆறு ஆண்டு காலமாக யோகா பயின்று வருகிறார். இவர் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி டம்பளரை வயிற்றுப்பகுதியில் வைத்தபடி, உடலை பின் நோக்கி வளைத்து கால்களை பிடித்தபடி, டிம்பாசனம் எனும் யோகாசனத்தில், தொடர்ந்து, 10 நிமிடங்கள் நின்று உலக சாதனைப் படைத்தார்.
இவரது சாதனை ‛இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ மற்றும் ‛நோபல் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்தன. இதற்கு முன் இவர் யோகாவில் கின்னஸ் சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாதனைப் படைத்த திவ்வியேஷ், யோகா பயிற்றுநர் சந்தியா, ஆகியோரை, இலங்கைத் தமிழர் முகாம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:யோகாவில் உலக சாதனை - ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’இல் இடம்பிடித்த மாணவி