திருவள்ளூர்: ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை அழைத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவானி லெகாரா, உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமார், வில் அம்பு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் இன்று (அக்.25) கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சி பள்ளி் தாளாளர் விஷ்ணு சரண், இயக்குநர் தரணிதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய பாராலிம்பிக் தலைமை அலுவலர் ராகுல் சாமி, பொதுச் செயலாளர் பிரபாகரன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்