ETV Bharat / state

திருவள்ளூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்! - thiruvallur protest

திருவள்ளூர் : விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்குவதாக அறிவித்த ஸ்மார்ட்போன் வழங்காததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

blinds_porattam
blinds_porattam
author img

By

Published : Feb 15, 2021, 5:24 PM IST

கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை ஸ்மார்ட்போன் வழங்காத நிலையில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறியதாகவும், ஆனால், இதுவரை யாரும் பெறாத நிலையில் வழங்கியதாக கூறுவதுடன் மாற்றுத் திறனாளிகளான தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி இன்று(பிப்.15) 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் முறையான பதில் அளிக்காததால் ஆட்சியர் நேரில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். அலுவல் காரணமாக வெளியில் சென்றிருப்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்குட்டி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.