திருவள்ளூர், ஊத்துக்கோட்டையை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மகா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் காலபைரவர் ஜெயந்தி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இவ்வாண்டு 809ஆவது காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, காலபைரவருக்கு வெள்ளிக்கவச ஊர்வலம், 64 கலச அபிஷேகம், ஊஞ்சல் சேவை, வெள்ளி ஆபரணங்கள் அணிவிப்பு உள்ளிட்ட சிறப்பு ஆராதணை அபிஷேகங்களுடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் 1008 பால்குடங்களை பேரணியாக கொண்டு சென்று காலபைரவருக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பால், பழம், தயிர், திருநீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட அபிஷேகங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில் தமிழ்நாடு, ஆந்திராவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் அருளை பெற்றனர்.
இதையும் படிங்க: காலபைரவா் ஜெயந்தி - சிறப்பு அபிஷேகம்!