ETV Bharat / state

'விரைவில் மும்பை தங்க உருக்கு ஆலையில் திருக்கோயில்களின் 130.512 கி.கி. தங்கத்தை உருக்கும் பணிகள்' - பாரத ஸ்டேட் வங்கி

மத்திய அரசுக்குச் சொந்தமான மும்பை தங்க உருக்கு ஆலையில் உருக்கப்பட உள்ள 130 கிலோ 512 கிராம் தங்கத்தின் மூலம் பெறப்படும் வைப்புத்தொகை, வட்டித்தொகை கோயில் திருப்பணிகளுக்கு செலவிடப்படும் என்றும்; சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Jul 2, 2022, 1:18 PM IST

திருவள்ளூர்: மும்பையிலுள்ள மத்திய அரசுக்குச்சொந்தமான தங்க உருக்கு ஆலையில் 130 கிலோ 512 கிராம் தங்கத்தை உருக்கிப்பெறும் வைப்புத்தொகை வட்டி மூலம் கிடைக்கும் தொகையானது கோயில் திருப்பணி அடிப்படைப்பணிகளுக்குச்செலவிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஜூலை1) ஆய்வு மேற்கொண்டு 130 கிலோ தங்க நகைகளை, சுத்த தங்க நகைக்கட்டிகளாக மாற்றிட பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்படைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், ' இந்து சமய அறநிலையத்துறைக்குச்சொந்தமான கோயில்களில் இருந்து பெறப்படும் காணிக்கை நகைகளை உரிய முறையில் சேகரித்து, மத்திய அரசுக்குச் சொந்தமான மும்பை தங்க உருக்கு ஆலையில் தங்கக்கட்டிகளாக மாற்றயிருக்கிறோம். அதன்படி, 130 கிலோ 512 கிராம் தங்கம் உருக்கப்பட உள்ளது.

சட்டப்படி சந்திப்போம்: அவ்வாறு கிடைக்கும் வைப்புத்தொகை மூலம் பெறப்படும் வட்டித்தொகையில் அந்தந்த கோயில்களின் திருப்பணிகள் மற்றும் பராமரிப்புப்பணிகளுக்கான மேம்பாட்டிற்கு வழங்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். பக்தர்கள் காணிக்கை நகைகளை உருக்குவதை யார் எதிர்த்தாலும் இது போன்று நல்ல திட்டங்களை கைவிட மாட்டோம்' என்றார்.

திருக்கோயில்களுக்கே வருமானம்: 'இது ஒரு நல்ல திட்டம். பல்வேறு அவமானங்கள்; ஏச்சுக்கள் பேச்சுக்கள் அவதூறுகள் எல்லாவற்றையும் கடந்து முதலமைச்சரின் தெளிவான வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களுக்கு வருமானத்தை ஏற்படுத்துகின்ற இந்த திட்டம்; மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்து பக்தர்கள் மகிழ்ச்சிக்கு வித்திடும்.

15 நாட்களாக தங்கம் பிரித்து எடுக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியிடம் நீதிபதிகள் கண்காணிப்பில், 130 கிலோ 512 கிராம் தங்கம் சேகரிக்கப்பட்டு, அதனை ஒப்படைத்து தங்க கட்டிகளாக மாற்ற உள்ளோம். வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெறும்' என்று தெரிவித்தார்.

'விரைவில் மும்பை தங்க உருக்கு ஆலையில் திருக்கோயில்களின் 130.512 கி.கி. தங்கத்தை உருக்கும் பணிகள்'

தயாராகும் தேர்: பெரியபாளையம் உள்ளிட்ட 3 கோயில்களில் தங்கத் தேரானது, நேர்த்தியாக செய்யப்படும் என்றும்; 18 மாதங்களுக்குள் தேர் பவனி நடைபெறும் என்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்; வருகிற நவம்பர் மாதம் சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அறநிலைத்துறை ஆணையர்கள், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதையும் படிங்க: திரௌபதி முர்மு நிகழ்ச்சியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.