ETV Bharat / state

மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய ஆறு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

periyapalayam sand theft  பெரியபாளையம் மணல் திருட்டு  ஆரணி ஆற்றில் ஆற்று மணல் கொள்ளை  மணல் திருட்டு  கிளாம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு  இந்து மக்கள் கட்சி பிரமுகர்
மணல்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
author img

By

Published : Feb 1, 2020, 9:00 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் ஏரி, ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலின் அடிப்படையில் அவருடைய உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் காணிப்பாளர் சந்திரகாசன் தலைமையில் பெரியபாளையம் காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, துணை ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ், காவலர்கள் உள்ளிட்ட சிலர் இரண்டு நாள்களாக மாறுவேடத்தில் ஆரணி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

அப்போது, இரண்டு லாரிகள் ஆரணி ஆற்றிலிருந்து மணல் கடத்துவது குறித்து தெரியவந்ததை அடுத்து, லாரிகளைப் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர்களான நாகராஜ், தமிழரசு உட்பட ஐந்து பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும், லாரிகளின் உரிமையாளரும் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரைக் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்பு இந்த ஆறு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 'டெல்லி துப்பாக்கிச் சூடு கண்டனத்திற்குரியது' - ராஜா ஹுசைன் பேட்டி

Intro:31-01-2020
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட
பெரியபாளையம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய ஆறு பேரு மற்றும் இரண்டு லாரிகளை பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .Body:31-01-2020
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட
பெரியபாளையம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய ஆறு பேரு மற்றும் இரண்டு லாரிகளை பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் ஏரியில் மற்றும் ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இத் தகவலின்பேரில் அவருடைய உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி சந்திரகாசன் தலைமையில் பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் துணை ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் போலீசார் இரண்டு நாட்களாக மாறுவேடத்தில் ஆரணி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது 2 லாரிகள் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதை தெரியவந்தது இதனை அடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து லாரி ஓட்டுனர் நாகராஜ், தமிழரசு, கிளீனர்கள் சரவணன், மதன், 5 பேரையும் மேலும் லாரி உரிமையாளர் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து பின்னர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.