முருகனின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா இன்று நடைபெற்றது. மலை கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் கூடுவார்கள் என்பதால் கரோனா நோய் பரவல் தடுக்க பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு வைர தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் உற்சவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு பட்டு வஸ்திரங்களை அக்கோயில் இணை ஆணையர் தர்மாரெட்டி சமர்ப்பித்தார்.
அவரை திருக்கோயில் சார்பில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ஜெயசங்கர் ஆகியோர் வரவேற்று பிரசாதம் வழங்கினர்.