செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு சோத்துப்பாக்கம் சாலையில் சிவா என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடை உள்ளது. கடைகள் முழு ஊரடங்கு காரணமாகப் பூட்டப்பட்ட நிலையில், நேற்று (மே.17) காலை சிவா கடையைத் திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 20, 000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும், அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது மளிகைக் கடையின் பூட்டையும் உடைத்து 10,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி