திருவள்ளூர் : வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (எ) அப்பு (28). கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (எ) சந்தோஷ்(28). இவர்கள் இருவர் மீதும் மணவாளநகர் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் செயின் பறிப்பு, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், எஸ்.பி. வருண்குமார் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் இருவரையும் குணடர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவை மணவாளநகர் காவல்துறையினர் சென்னை புழல் சிறை அலுவலர்களிடம் அளித்தனர்.
இதையும் படிங்க : கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு