ETV Bharat / state

செந்தில்பாலாஜியின் ட்விட்டர் பதிவால் பரபரப்பு - maridass

திமுக ஆட்சியில் நிலக்கரியைக் காணவில்லை என்ற மாரிதாஸின் பதிவுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

senthil balaji
senthil balaji
author img

By

Published : Aug 21, 2021, 7:53 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத்தை, சரியான வழியில் பயன்படுத்தி, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில், இவ்வளவு பெரிய தவறுகள் நடத்தியிருக்கும், கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது.

தவறு இழைத்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அலுவலர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் மின்வாரியம் உள்ளது. மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து, வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.

நிலக்கரி காணவில்லை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியைக் காணவில்லை. இதில் குற்றம்புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

திமுக ஆட்சியில் காணவில்லை

இந்நிலையில் யூ-ட்யூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் முக்கியச் சாதனை மின்வாரியத்திலிருந்து இரண்டு லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்; திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20 நாள் தேவையான நிலக்கரி, தினமும் அப்டேட் செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மாரிதாஸ் ட்வீட்
மாரிதாஸ் ட்வீட்

அடிப்படை அறிவு வேண்டும்

மாரிதாஸின் இந்தப் பதிவுக்கு செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், "அன்புத் தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு.

செந்தில் பாலாஜி ட்வீட்
செந்தில் பாலாஜி ட்வீட்

அறமும், ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள்தான், இல்லாததை இருப்பதாக வெள்ளைப் பலகையில் அப்டேட் செய்துகொண்டிருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.