திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள வெள்ளி அகரம் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை தாறுமாறாக ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது அவர் காரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் காரை கைப்பற்றிய காவல் துறையினர் அதனை சோதனை செய்தபோது, சுமார் ஒரு டன் எடையுள்ள 12 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் இருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் செம்மரக்கட்டைகளை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினர், தப்பிச் சென்ற நபர் யாரென்றும், அவர் செம்மரக்கட்டைகளை எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'முதலில் இந்த படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான்'- மஞ்சு வாரியர்