ETV Bharat / state

‘அண்ணன் தலைவர்... தங்கை பொதுச்செயலாளர்!’ - காங்கிரஸ் மீது சீமான் பாய்ச்சல் - seeman

திருவள்ளூர்: காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சீமான் பரப்புரை
author img

By

Published : Apr 16, 2019, 11:15 AM IST

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றிசெல்வியை ஆதரித்து செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “எல்லாம் இலவசமாக உள்ளது ஆனால் கல்வி மருத்துவம் இலவசமாக இல்லை. இதையெல்லாம் கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன போனால் என்ன. மருத்துவத்துறையை வியபாரத்துறையாக மாற்றியுள்ளனர். மருத்துவமனை கட்டி வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

கல்வி வியாபாரமாகிவிட்டது. தண்ணீரை விற்பனைப் பொருளாக மாற்றியது எவ்வளவு பெரிய துரோகம். வேலை கொடுத்தால் இலவசம் தேவையில்லை. உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 5 கோடிக்கு திட்டம் போட்டுவிட்டு 50 கோடிக்கு நல்லாட்சி கொடுப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.

உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால் அவர்களின் குடும்பம் வெளிச்சத்தில் வாழும், நாம் இருட்டில்தான் வாழவேண்டும். இரட்டை இலை மொட்டை இலையாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதற்கு வாக்கு செலுத்துவதும், நாம் வாய்க்கரிசி போட்டு கொள்வதும் ஒன்று.

சீமான் பரப்புரை

நான் அறிவித்தபடி தனித்துப் போட்டியிடுகிறேன். எத்தனை முறை தோற்றாலும் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. 100 கோடி செலவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி சேவை செய்வதற்கு அவர்கள் என்ன காந்தியா.

தேசம் எந்த ஊரு குடும்பத்தின் சொத்தும் கிடையாது. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என வரிசையாக வருகிறார்கள். அண்ணன் தலைவர்... தங்கை பொதுச்செயலாளர். எப்படிப்பட்ட கட்சியாக இருக்கிறது காங்கிரஸ்” என்றார்.

மேலும், 50 ஆண்டுகளாக இந்த நாட்டிற்கு செய்யாத சாதனையை, அடுத்த ஆட்சியில் செய்துவிடுமா காங்கிரஸ் எனவும் கேள்வி எழுப்பினார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.