திருவள்ளூர் மாவட்டம் அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இதனால் தினந்தோறும் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அப்பொழுது ஒரு ஊழியர் கொண்டுவந்த கிருமிநாசினி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பழுதானது. பழுதான அந்த இயந்திரத்தை அவர் பல மணி நேரம் போராடியும் சீர்செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர் கிருமிநாசினி தெளிக்காமல் புறப்பட்டுச் சென்றார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளுக்கிடையே வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.