திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோரைக் கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (அக்.10) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். அதில் மணல் கொள்ளையின் போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இதில், சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் விற்பனை நிலையங்களை மூடவேண்டும். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளை அமைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுக்காத மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: 'ஆன்லைனில் புக் செய்து மணல் கிடைக்க உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும்'- நீதிமன்றம்