ஊத்துக்கோட்டை வட்டம், செஞ்சியகரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் முருகையன் (53). சீனிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும், விவேக் ரெட்டி என்பவர், தனது போர்வெல்லிற்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்று பெற, கிராம நிர்வாக அலுவலர் முருகையாவை அணுகினார். தடையில்லா சான்று பெற முருகையா 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவேக் ரெட்டி, பணம் தருவதாக கூறிவிட்டுச் சென்றார்.
பின்னர், அவர் இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்தார். இப்புகாரையடுத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் குமரவேலு தலைமையில், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று செஞ்சியகரம் கிராமத்தில் முகாமிட்டனர்.
நேற்று இரவு ஏழு மணிக்கு முருகையன், மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கினார். பின்னர் விவேக் ரெட்டியிடம் 20 ஆயிரம் ரூபாய் பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்துடன் முருகையனைப் பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க:
பைக்கில் மின்னல் வேகம்’ - இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!