திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினரும் நிலையான கண்காணிப்புக் குழுவினரும் சுழற்சி முறையில் மூன்று குழுவினராக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் விதிகள் அமலானது முதல் இன்று வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 540 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 74 லட்சத்து ஐந்தாயிரத்து 540 ரூபாய் பணம், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணமில்லாத 52 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'சொந்த தொகுதியையே ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி' - ஸ்டாலின்