ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே தோட்டத்தில் ரவுடி வெட்டிக்கொலை - பழிக்குப் பழி கொலை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பிரபல ரவுடி வெட்டப்பட்டு தலை தனியாக, உடல் தனியாக வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rowdy-murdered-in-gummidipoondi
rowdy-murdered-in-gummidipoondi
author img

By

Published : Aug 16, 2020, 1:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபாக்கத்தைச் சேர்ந்தவர், மாதவன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சில நாள்களுக்கு முன்னதாக பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தலை மட்டும் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், புது கும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தோட்டத்தில், உடல் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதையடுத்து கொலை செய்யப்பட்டது பிரபல ரவுடி மாதவன் எனத் தெரியவந்தது. தொடர்ந்து மாதவனின் சடலம் உடனடியாக உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 3 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி மாதவன் முக்கியக் குற்றவாளி ஆவார்.

தற்போது 3 பேர் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் மாதவனின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது. இதனால் மாதவன் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.