சென்னையில் கைதான ரவுடி ஒருவருக்கு துப்பாக்கி கொடுத்த வழக்கில் ரவுடி பினு கைது செய்யப்பட்டார். எண்ணூரைச் சேர்ந்த பி.டி.ரமேஷ் என்பவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். ரமேஷ் வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி கஞ்சி செந்தில் என்பவரை மது போதையில் சுட்டதாக அலெக்சாண்டர் என்பவர் கோத்தகிரியில் கைதாகி உள்ளார். ரமேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த துப்பாக்கியை ரவுடி பினுவிடம் இருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இரண்டு முறை நிபந்தனை பிணையில் வெளிவந்த பினு, காவல்நிலையத்தில் கையெழுத்திடச் செல்லாததால் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கொளத்தூரில் உள்ள தனது தாயை சந்திக்க வந்த பினு கைது செய்யப்பட்டார். பி.டி.ரமேஷுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தது பற்றியும், வேறு யார் யாருக்கு அவர் விநியோகம் செய்துள்ளார் என்பது குறித்து பினுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.