ETV Bharat / state

காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை முடங்கும் அபாயம்!

author img

By

Published : Oct 29, 2019, 7:38 AM IST

திருவள்ளூர்: காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீருடன் சேர்ந்து தொழிற்சாலையை சூழ்ந்துள்ளதால், தொழிற்பேட்டை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை முடங்கும் அபாயம்!

திருவள்ளூர் - ஆவடி சாலையில் அமைந்துள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இச்சாலையோரம் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் வீடுகள், தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகின்றன. இதன்காரணமாக, ஆவடி சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, அந்தச் சாலை வழியாகப் பயணிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

காக்களூர் தொழிற்பேட்டை கழிவுகளை தண்ணீர்குளம் ஏரியில் விடுவதற்கு விவசாயிகளும் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கழிவுநீர் செல்லும் கால்வாயில் மண்ணைக் கொட்டி நிரப்பி தொழிற்சாலை கழிவுகள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.

காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் தண்ணீர்குளம் ஏரியில் நீர் மாசடைவதுடன் நிலத்தடி நீரும் கேள்விக்குறியாகயுள்ள நிலையில், தொழிற்பேட்டையில் இருந்துவரும் கழிவுநீர் கால்வாயில் ஓடை மண்ணைக் கொட்டியதால், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவிவருகிறது.

காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை முடங்கும் அபாயம்

இதனால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை மேலாளர் கவிதா மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், மாவட்ட வருவாய் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது தொழிற்சாலைகள் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆலைக் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காததால், தொழிற்சாலைகள் பணி முடங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு: ஒருவர் கொலை!

Intro:28-10-2019

திருவள்ளூர் அருகே உள்ள
காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில்
வெளியேறும் கழிவுநீர் மழை நீருடன் சேர்ந்து தொழிற்சாலைகள் சூழ்ந்துகொண்டு நோய் பரப்பும் நிலை உருவாகி உள்ளது .ஆலைகழிவு நீரை ஏரிக்குள் விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தால் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Body:திருவள்ளூர் :

காக்களூர் தொழிற்பேட்டை ஆலைகளின் கழிவு கள் மற்றும் குப்பை கூளங்கள் கொட்டுவதால், ஆவடி சாலையில் துர்நாற்றம் வீசுகிறது.திருவள்ளூர் - ஆவடி சாலையில், காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இச்சாலையோரம், தொழிற்சாலை கழிவுகள் பிளாஸ்டிக் குப்பைகள் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் வீடுகள், தொழிற்பேட்டையில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக, ஆவடி சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் காக்களூர் தொழிற்பேட்டை கழிவுகள் தண்ணீர் குளம் ஏரியில் விடுவதற்கு விவசாயிகளும் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கழிவு நீர் செல்லும் கால்வாய் மண்ணைக் கொட்டி நிரப்பி தொழிற்சாலை கழிவுகள் வரவிடாமல் தடுத்து உள்ளனர்

தண்ணீர்குளம் ஏரி பயன்படுத்துவோர் காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் ஏரியில் நீர் மாசடைவது டன் நிலத்தடி நீரும் கேள்விக்குறியாக மாறியதால் தொழிற் பேட்டையில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் ஓடை மண்ணைக் கொட்டி அழைத்ததால் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுநீர் தொழிற்பேட்டை வளாகத்தில் தேங்கி தற்போது துர்நாற்றம் வீசி நோய் பரப்பி வருகிறது இதனால் தொழிற்சாலைகளுக்கும் தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அது மட்டுமின்றி இங்குள்ள மின்மாற்றிகள் மின்கம்பங்களில் கூட பழுது பார்க்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தேங்கியுள்ள மழைநீரில் பணி செய்ய முடியாமல் அவதியுற்று வருவதுடன்
தொழிற்சாலை கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து சேர்ந்து சகதியுமாய் தொழிற்பேட்டை வளாகமே தண்ணீர் சூழ்ந்து
இங்கு வந்து செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதபடி கழிவுநீரில் ஊர்ந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு உள்ளது மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பது முறையாக காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை மேலாளர் கவிதா மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்ட மாவட்ட வருவாய் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது தொழிற்சாலைகள் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது உரிய முறையில் ஆலைக் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் காக்களூர் தொழிற்பேட்டை தற்போது துர்நாற்றத்தால் நோய் பரப்பும் மையமாகவும் தொழிற்சாலைகள் பணி முடங்கினால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி நிலை உருவாகியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.