திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் ஷர்மிளா (23), சென்னை வைஷ்ணவா கல்லூரியில் மைக்ரோ பயாலஜி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது பிறந்தநாளின் போது தந்தை உலகநாதன், தாய் அனிதா இருவரும் சிறிய மைக்ரோஸ்கோப் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.
தனது படிப்புக்கு உதவும் வகையில் பெற்றோர் வழங்கிய மைக்ரோஸ்கோப்பை கொண்டு மாணவி ஷர்மிளா பல்வேறு உயிரினங்களை ஆய்வு செய்துள்ளார். பூஞ்சை காளான், மண், பாம்பு தோல், பறவைகளின் இறகுகள் உள்ளிட்ட கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் நுண்ணுயிரிகள் வரை கண்டறிந்துள்ளார்.
ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்கும் ஆய்வுகளை ஆவணப்படுத்தி அதனை காட்சிப்படுத்தியுள்ளார். இதுவரை 17ஆயிரத்து 17 உயிரினங்களை ஆய்வு செய்துள்ளதாக மாணவி ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவரை பாராட்டும் விதமாக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அறிவியல் பிரிவில் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் பதக்கத்தையும் சான்றிதழையும் வழங்கி கவுரவித்துள்ளது. மாணவியின் இந்தச் செயலை கிராம மக்கள் நேரில் வந்து வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த தடையும் ஏற்படாது' - அமைச்சர் கடம்பூர் ராஜு