திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் திருத்தணியில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கிலிருந்து திருத்தணி தாலுகாவில் உள்ள 137 ரேஷன் கடைகளுக்கு ரோஷன் பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைக்கு அதிக அளவில் பச்சரிசி அனுப்பப்படுகிறது. அதாவது 70 சதவீதம் பச்சரிசி விநியோகம் செய்யப்படுகிறது 30 சதவீதம் மட்டுமே புழுங்கலரிசி சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது வெயில் காலம் என்பதால் பச்சரிசி வாங்குவதற்கு ரேஷன் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில், ரேஷன் கார்டுதாரர்கள் பச்சரிசி வேண்டாம் என்றும் புழுங்கல் அரிசி அதிக அளவில் போடுமாறும் வற்புறுத்துகின்றனர். இதையடுத்து, பொருள் கிடங்கு உதவி ஆய்வாளர் முருகையன், எங்களுக்கு வரும் அரிசியைதான் உங்களுக்கு அனுப்ப முடியும் ஆகையால் நீங்கள் திருவள்ளூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து புழுங்கலரிசியை அதிக அளவில் கேட்டு பெறவேண்டும் எனக் கூறி அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.