ETV Bharat / state

புழல் ஏரியில் வணிகவரித்துறை ஊழியரின் சடலம் கண்டெடுப்பு - காவல்துறை விசாரணை!

திருவள்ளூர்: புழல் ஏரியில் வணிகவரித்துறை ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

recovery-of-the-body-of-a-commercial-tax-employee-in-puhal-lake-police-investigation

author img

By

Published : Sep 17, 2020, 10:08 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தியணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டனர்.

பின்னர் சடலத்தை பரிசோதனை செய்ததில், அதிலிருந்த அடையாள அட்டையில் இறந்தவர் சென்னை மண்ணூர் பேட்டையைச் சேர்ந்த ரவி என்பதும், அவர் வணிகத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.