திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியம், பப்பரம்பக்கம் ஊராட்சி உள்ளிட்ட ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நாளை நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார், 'மறு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்காளர்களைத் தவிர்த்து வேறு நபர்கள் யாரும் வரக்கூடாது. அந்த இடங்களில் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு
!