திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொள்ள முயன்ற போது, டிரைவர் காரை விட்டு விட்டு தப்பிச் சென்றார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்த போது பாலிகீட்ஸ் எனப்படும் அரியவகை புழுக்கள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட இந்த புழுக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்படுவதால் கடத்தல் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.