ETV Bharat / state

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ரஜினிகாந்த்? - அர்ஜூன் சம்பத் கணிப்பு - Thiruvallur district news

திருவள்ளூர்: நடிகர் ரஜினிகாந்த் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ரஜினிகாந்த்

author img

By

Published : Sep 29, 2020, 1:01 PM IST

திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூரில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகாத்தம்மன், சித்தநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நந்தவனத்தின் தடுப்புப்பகுதிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து எறிந்து விட்டனர்.

இதனை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது என்பது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. அதை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ரஜினிகாந்த்

பாஜக ஒரு ஜனநாயக கட்சி ஹெச். ராஜா இரண்டு முறை தேசிய செயலாளராக இருந்துள்ளார். ஹெச். ராஜா அற்புதமான இந்து தமிழர்களின் தலைவர். அவருக்கு உரிய மரியாதை கட்சியில் இருக்கும்.

திமுகவின் பொய்ப் பரப்புரை எப்போதும் எடுபடாது. ரஜினிகாந்த் தேர்தல் பணியைத் தொடங்கி விட்டார்.

மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டனர். எனவே, ரஜினிகாந்த் தான் அடுத்த முதலமைச்சர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போஸ்டர் ஒட்ட மாட்டோம் என போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.