திருவள்ளூர்: இந்துப் பண்டிகைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழாவாக ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படவில்லை.
கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த ஆண்டு ஆயுத பூஜையைக் கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட உளுந்தை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அலுவலக நோட்டுகள், கணக்குப் புத்தகங்கள், பேனா ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இனிப்பு, பொரி, நிலக்கடலை, சுண்டல் ஆகியவற்றை இறைவனுக்கு படைத்து பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள், 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு இட்லி குக்கர், இனிப்பு, பொரி ஆகியவற்றை வழங்கினர்.
இதையும் படிங்க: நவராத்திரி சிவபூஜையில் ஜொலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி