நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் 2003ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து கடந்த மூன்று வருடங்களாக பழல் காவல்நிலையத்தில் பணி பணிபுரிந்து வந்தார். இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஷீபா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 24) புழல் பொப்பிலி ராஜா மேல்நிலை பள்ளி அருகில் மயங்கி கிடந்தார். அப்போது சக காவலர்கள் இவரை மீட்டு செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவன் காவல் நிலையத்தில் சரண்!