ETV Bharat / state

தடுப்பணைப் பணிகளை நிறுத்த வேண்டும் - பொதுமக்கள் முற்றுகை

author img

By

Published : Aug 31, 2020, 11:15 PM IST

திருவள்ளூர்: ஆண்டார் மடத்தில்  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணிகளை நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

public protested to stop the dam work
public protested to stop the dam work

திருவள்ளூர் மாவட்டம் 13 வது வார்டு கவுன்சிலுக்குள்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் ஆண்டார்மடம் கிராமம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசு பொதுப்பணித் துறை மூலம் 62.36 கோடி ரூபாயில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரணி ஆற்றின் குறுக்கே ஓடைகள் இணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி ஆண்டார்மடம் கிராமத்தையொட்டி மிகப்பெரிய செக் டாம் எனப்படும் தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது.

இப்பகுதியில் உப்புநீர்த் தன்மைகொண்ட ஆரணி ஆற்றின் மணல் எடுத்து நிரப்பி அணைபோல் மாற்றி கட்டப்பட்டுவருகிறது. இயற்கையாக மேற்கிலிருந்து கிழக்காக பாய்ந்து ஓடி வங்கக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்து இந்தப் பணியை செய்துவருவதால் மேற்கிலிருந்து வரும் நீரின் அளவு உயர்வதோடு தற்போது தென்மேற்குப் பருவமழையைப் பெறுவதாலும் இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கனமழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையும் வர உள்ளதாலும் இங்கு தடுத்துள்ள ஆரணி ஆற்றின் அளவு உயர்ந்து இந்த ஆற்றை ஒட்டியுள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் உப்புத் தண்ணீரில் மூழ்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பெருமளவில் அச்சமடைந்துள்ளனர்.

இங்கு அமைந்துள்ள ஐந்து ஊராட்சிகளின் மக்களின் பிரதான தொழில் வேளாண்மை. தென்மேற்குப் பருவமழையின்போது விதைத்து வடகிழக்குப் பருவமழையினை சரியாகக் கையாண்டு தை மாதத்தில் அறுவடைசெய்வது என்பது தொடர்ந்து இப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேற்படி பணியை பஞ்சாயத்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அடுத்து வரும் கோடை காலத்தில் பணியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும், உள்ளூர் மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் எவ்வளவு கொள்ளளவு நீர் தேக்கிவைக்கப்படும் என்ற விவரம், தரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பிறகு வேலையை தொடங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வலியுறுத்தியும் பணி நடைபெறும் இடத்திற்குப் பொதுமக்கள் திரண்டுவந்து முற்றுகையிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.