திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம், ராம தண்டலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக டில்லிபாபு, எபினேசர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்யப் போவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்த சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!