ETV Bharat / state

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - Public demonstration demanding removal of shrimp farms in Thiruvallur

திருவள்ளூர்: பொன்னேரி அருகே இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 5, 2020, 5:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பொதுமக்கள் ஏரி நீரை பாசனத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஏரியில் 20-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளின் கழிவு நீர் கலக்கப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு ஓர் ஆண்டு ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

எனவே மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் கிரிஸ்டி பொதுமக்களை ஒருமையில் பேசியுள்ளார்.

இதனால் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: காய்கறிச் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு - வியாபாரிகள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.