திருவள்ளூர்: மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ராமசமுத்திரம் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அக்கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தம்
இந்நிலையில் தனி நபரால் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என திருத்தணி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு